Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குறைதீர் கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.14.46 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.14.46 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.14.46 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.14.46 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

ADDED : ஜூன் 17, 2025 02:02 AM


Google News
நாமக்கல், குறைதீர் கூட்டத்தில், 33 பயனாளிகளுக்கு, 14.46 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 564 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தாட்கோ சார்பில், ஐந்து பேருக்கு, 6,000 ரூபாய்- மதிப்பில் கண் கண்ணாடி மற்றும் பட்டப்படிப்பு உதவித்தொகை, இரண்டு பேருக்கு, 14.40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தொழில் மற்றும் வாகனத்திற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி, கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும், 10 பேருக்கு நலவாரிய அடையாள அட்டை, 16 பேருக்கு, புதிய சீர்மரபினர் அடையாள அட்டை என, 33 பேருக்கு, 14.46 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், தனி டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்.டி.ஓ., சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us