/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தனித்து போட்டியிடுவோம்;த.ஜ.வெ.க., தலைவர் பேட்டி தனித்து போட்டியிடுவோம்;த.ஜ.வெ.க., தலைவர் பேட்டி
தனித்து போட்டியிடுவோம்;த.ஜ.வெ.க., தலைவர் பேட்டி
தனித்து போட்டியிடுவோம்;த.ஜ.வெ.க., தலைவர் பேட்டி
தனித்து போட்டியிடுவோம்;த.ஜ.வெ.க., தலைவர் பேட்டி
ADDED : செப் 22, 2025 01:56 AM
நாமக்கல்:தமிழக ஜனநாயக வெற்றிக்கழகம், தமிழ்நாடு குரும்பா குருமன்ஸ் இன முன்னேற்ற சங்க ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. தமிழக ஜனநாயக வெற்றிக்கழக நிறுவன தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 90 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு தொகுதியிலும், 40,000 முதல், 60,000 வரை வாக்காளர்கள் உள்ளனர். தாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்திருந்தாலும், கட்சியின் கொள்கையில் ஒத்துபோகின்ற அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால், எங்களுடைய கோரிக்கைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், கூட்டணியில் இணைய முயற்சிப்போம். குரும்பர் சமுதாய மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில், தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.