/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குழாய் உடைந்து தண்ணீர் வீண் 4 நாட்களாக குடிநீரின்றி அவதி குழாய் உடைந்து தண்ணீர் வீண் 4 நாட்களாக குடிநீரின்றி அவதி
குழாய் உடைந்து தண்ணீர் வீண் 4 நாட்களாக குடிநீரின்றி அவதி
குழாய் உடைந்து தண்ணீர் வீண் 4 நாட்களாக குடிநீரின்றி அவதி
குழாய் உடைந்து தண்ணீர் வீண் 4 நாட்களாக குடிநீரின்றி அவதி
ADDED : ஜூன் 04, 2025 01:55 AM
மோகனுார், மோகனுார் தாலுகா, ஆண்டாபுரம் பஞ்.,ல், ஐந்தாவது வார்டில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, பஞ்., நிர்வாகம் சார்பில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, நான்கு நாட்களுக்கு பின், மேல்நிலை தொட்டியில் இருந்து வரும் குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. அவற்றை சரி செய்ய பஞ்., நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், அங்குள்ள குடும்பத்தினர் தண்ணீரின்றி கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வேறுவழியின்றி, காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு, உடைந்த குழாயை சரி செய்து, தொடர்ந்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.