/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேடப்படும் குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு தேடப்படும் குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தேடப்படும் குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தேடப்படும் குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தேடப்படும் குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ADDED : அக் 15, 2025 01:06 AM
நாமக்கல், மோகனுார், அய்யம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர் மீது, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், 2013ல், மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதன் காரணமாக, அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
அதனால், அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, வரும், நவ., 17 காலை, 10:30 மணிக்கு, நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண், 2ல், ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


