/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் கணக்கெடுப்பு ராசிபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் கணக்கெடுப்பு
ராசிபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் கணக்கெடுப்பு
ராசிபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் கணக்கெடுப்பு
ராசிபுரம் பிரதான சாலையில் வாகனங்கள் கணக்கெடுப்பு
ADDED : மே 10, 2025 01:15 AM
ராசிபுரம், ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பிரதான சாலைகளில் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதான சாலை, முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் செல்லும் வாகனங்களை கணக்கெடுத்து வருகின்றனர். தற்போது, நெடுஞ்சாலைத்துறை ராசிபுரம் உட்கோட்டம் சார்பில் அணைப்பாளையம் பைபாஸ், நாமக்கல் சாலை, நாமகிரிப்பேட்டையில் இருந்து பேளுக்குறிச்சி செல்லும் சாலை உள்பட, 10 இடங்களில் வாகன எண்ணிக்கை நடந்து வருகிது. இவ்வழியாக செல்லும் டூவீலர், சைக்கிள், கார், லாரி, பஸ், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களையம் கணக்கெடுத்து வருகின்றனர். இப்பணி, 7 முதல், 10 நாட்கள் வரை நடக்கவுள்ளது.
இதுகுறித்து, ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை முக்கிய சாலை, சந்திப்புகளில் வாகன நெரிசல் குறித்து கணக்கெடுப்பது வழக்கம். இதன் மூலம் தான் சாலை விரிவாக்கம், சாலையின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும். நான்கு ஆண்டுகளில் சராசரியாக, ஐந்து சதவீதம் வாகன உயர்வு இருக்கும். அதற்கு அதிகமாக இருந்தால், வீடியோ மூலம் சரிபார்க்கப்படும். அதன்பின், குறிப்பிட்ட சாலையை தரம் உயர்த்துவதா, அகலப்படுத்தி தரம் உயர்த்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டாக்டரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து
நாமகிரிப்பேட்டை, மே 10
கூட்டுறவு மருந்தகத்தில் ஆய்வு செய்த கலெக்டர் உமா, டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து, மாத்திரை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கூட்டுறவு துறை சார்பில், தமிழகம் முழுவதும், 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், மங்களபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளிலும் கூட்டுறவு சார்பில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று, மங்களபுரத்தில் உள்ள மருந்தகத்தை கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது. மருந்தகத்தில் மருந்து பொருட்களின் விற்பனை விபரம், மருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விபரம், மருந்தகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும், 'மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, மங்களபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை வனத்துறைக்கு ஒப்படைப்பது குறித்தும், அப்பகுதியில் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு அடர் வனம் உருவாக்குதல், நிலத்தின் தன்மை, அளவீடு, பரப்பளவு, பாதை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.