/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவதி போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவதி
போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவதி
போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவதி
போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவதி
ADDED : செப் 12, 2025 01:37 AM
ப.வேலுார், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனங்களை, சாலையிலேயே நிறுத்துவதால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்தும், அப்பகுதியை கடக்கும் மக்கள் அவதிக்கும் உள்ளாகின்றனர்.
ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் இந்தியன் வங்கி, நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி, பஸ் நிலையம், அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. மேலும் நாமக்கல், சேலம், கரூருக்கு செல்லும் மக்கள், பழைய பைபாஸ் சாலை வழியாக அதிக அளவில் செல்கின்றனர்.
இத்சாலையில் காலை முதல் இரவு வரை இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்து வைக்கின்றனர். தற்போது பழைய பைபாஸ் சாலையில் டூ வீலர் மற்றும் கார் பார்க்கிங்காக பயன்படுத்துகின்றனர்.
இதனால் அப்பகுதி கடக்கும் பஸ்கள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் சுலபமாக செல்ல முடியவில்லை. இந்தச் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. மேலும் சாலையை கடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.