ADDED : செப் 21, 2025 12:57 AM
நாமகிரிபேட்டை, கஞ்சா பயன்படுத்திய இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாமகிரிபேட்டை தண்ணிர்டேங்க் பகுதியில், எஸ்.ஐ., மனோகரன் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது, இருவர் சிகரெட்டில் கஞ்சாவை வைத்து புகைத்து கொண்டிருந்தனர்.
இருவரையும் பிடித்து விசாரித்தபோது, நாமகிரிபேட்டை கிழக்குதெருவை சேர்ந்த விக்ரம், 21, அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த சதிஸ்குமார், 23, என்பது தெரிந்தது. இரண்டு பேரும் கூலித்தொழிலாளர்கள்.இருவரையும் கைது செய்து நாமகிரிபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.