/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாலை நடுவே மழைநீர் குட்டையால் அவஸ்தைசாலை நடுவே மழைநீர் குட்டையால் அவஸ்தை
சாலை நடுவே மழைநீர் குட்டையால் அவஸ்தை
சாலை நடுவே மழைநீர் குட்டையால் அவஸ்தை
சாலை நடுவே மழைநீர் குட்டையால் அவஸ்தை
ADDED : ஜூன் 01, 2024 06:27 AM
ராசிபுரம் : ராசிபுரம் பகுதியில் சாலை நடுவே உள்ள மழைநீர் குட்டையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் புறவழிச்சாலை உள்ளது.
நகர் பகுதியில் இருந்து சந்திரசேகரபுரம் வழியாக அணைப்பாளையம் செல்ல கிராமத்து சாலை உள்ளது.சி.எஸ்.புரம் ஊராட்சி வழியாகவும், ரயில்வே பாலத்தின் கீழே செல்லவும் இரண்டு வழிகள் உள்ளன. ரயில்வே பாலத்திற்கு கீழே செல்லும் சாலையில் புறவழிச்சாலைக்கு முன், தார்ச்சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு அடி ஆழம், 3 அடி அகலம், 6 அடி நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தில் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.இந்த பள்ளம் சாலையில் பாதியளவு இருப்பதால், வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடிவதில்லை. மழை நின்று ஒரு வாரமாகியும் இன்னும் தண்ணீர் குறையவில்லை. டூவீலரில் செல்லும் விவசாயிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சாலையில் மண் கொட்டி உயரப்படுத்தி சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.