ADDED : செப் 10, 2025 12:56 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீரை சுத்திகரிக்க, கூட்டப்பள்ளி ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பொதுமக்கள் வசிக்கம் பகுதியில் அமைக்க கூடாது. அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.