/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 11, 2024 12:01 PM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், இளநகரில் வேளாண் துறை சார்பில், 'அட்மா' திட்டத்தில், 40 விவசாயிகளுக்கு பயிற்சி முகாம், நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்தார். அவர், 'அட்மா' திட்ட செயல்பாடுகள், மத்திய, மாநில அரசு திட்டங்கள், நுண்ணீர் பாசனம், இயற்கை உரங்கள் பயன்பாடு, மண், நீர் பரிசோதனையின் முக்கியதுவம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரி உதவிப்பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, நிலக்கடலை பயிரில் விதை நேர்த்தி முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பம், பயிர்சாகுபடி முறைகள், ஹெர்போலிங் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி மயில், எலி, முயல், காட்டு பறவைகளை அண்டவிடாமல், பயிர்களை பாதுகாப்பது மட்டுமல்லால், பயிர் மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல், பரமசிவம் ஆகியோர், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருட்கள், 'உழவன் செயலி' பதிவிறக்கம், பயன்பாடு குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர், உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.