Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மண் கொட்டி சாலையை அடைத்ததால் ஆத்திரம் மறியலால் ஆண்டாபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு

மண் கொட்டி சாலையை அடைத்ததால் ஆத்திரம் மறியலால் ஆண்டாபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு

மண் கொட்டி சாலையை அடைத்ததால் ஆத்திரம் மறியலால் ஆண்டாபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு

மண் கொட்டி சாலையை அடைத்ததால் ஆத்திரம் மறியலால் ஆண்டாபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : அக் 14, 2025 07:21 AM


Google News
மோகனுார்: வழித்தடத்தை மண் கொட்டி அடைத்ததால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர், விவசாயிகள், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வளையப்பட்டி - காட்டுப்புத்துார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மோகனுார் தாலுகாவுக்கு உட்பட்ட வளையப்பட்டியில் இருந்து, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் செல்லும் சாலையில் ஆண்டாபுரம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியான அந்த இடத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வரு-கின்றனர். பள்ளி அருகில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்-டுப்பாட்டில் உள்ள கோவில் நிலம் உள்ளது. அதன் வழியாக, அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சென்று வரும் வகையில், தடம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர், அந்த வழித்தடத்தில் மண்ணை கொட்டி அடைத்துள்ளார். அதனால், அவ்வ-ழியாக பள்ளிகளுக்கும், விளை நிலங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் நேற்று மாலை, 4:30 மணிக்கு, பள்ளி முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் காரணமாக, வளையப்பட்டி-காட்டுப்புத்துார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சாலையின் இருபுறமும் பஸ், கார், வேன், பள்ளி வாகனம், இரு சக்கர வாகனம் என, ஏரா-ளமான வாகனங்கள் நீண்ட க்யூவில் காத்திருந்தன.தகவலறிந்த மோகனுார் தாசில்தார் மதியழகன் மற்றும் மோகனுார் போலீசார், ஹிந்து சமய அறநிலையத்துறையினர், சம்-பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, வழித்தடத்தை மறித்து கொட்டப்பட்ட மண்ணை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, மீண்டும் வழித்தடத்தை ஏற்படுத்-தினர். அதையடுத்து, பொதுமக்கள், ஒரு மணி நேரத்திற்கு பின், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us