/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
ADDED : ஜூன் 25, 2025 01:27 AM
சேந்தமங்கலம், புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது.
அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மாடுகள் வாங்கிச்செல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாட்டுச்சந்தைக்கு கேரளாவில் இருந்து மாடுகள் வாங்கிச்செல்ல குறைந்தளவே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், இரண்டு கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.