/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம் கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : செப் 15, 2025 02:07 AM
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில் மலை வாசஸ் தலமான கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறையையொட்டி, நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
தற்போது, கொல்லிமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், வானம் மேகமூட்டத்துடன் காணப் படுகிறது. குறிப்பாக, கொல்லிமலை முழுவதும் சாரல் மழை பெய்வதால், சுற்றுலா பயணிகள் குதுாகலம் அடைந்துள்ளனர். தொடர் மழை எதிரொலியால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. அதேபோல், படகு இல் லத்தில் சுற்றுலா பயணிகள், இயற்கையை ரசித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.