/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நெல்லுக்கு ஆதார விலை இல்லை கறுப்பு பொங்கலாக அனுசரிக்கும் அவலம்நெல்லுக்கு ஆதார விலை இல்லை கறுப்பு பொங்கலாக அனுசரிக்கும் அவலம்
நெல்லுக்கு ஆதார விலை இல்லை கறுப்பு பொங்கலாக அனுசரிக்கும் அவலம்
நெல்லுக்கு ஆதார விலை இல்லை கறுப்பு பொங்கலாக அனுசரிக்கும் அவலம்
நெல்லுக்கு ஆதார விலை இல்லை கறுப்பு பொங்கலாக அனுசரிக்கும் அவலம்
ADDED : ஜன 11, 2024 12:18 PM
நாமக்கல்: 'கரும்பு, நெல்லுக்கு ஆதார விலையை அறிவிக்காததால், பொங்கல் திருநாளை, கறுப்பு பொங்கலாக அனுசரிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: அனைத்து தரப்பு மக்களும் அறுவடை திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்குகிறது.
ஆனால், தமிழக விவசாயிகளிடம் அறுவடை செய்து, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் கரும்பு மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லிற்கு உண்டான ஆதார விலையை, தமிழக அரசு அறிவிக்காமல் இருக்கிறது.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என, காத்திருக்கும் விவசாயிகளுக்கு, இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதனால், மனமுடைந்துள்ள விவசாயிகள், இந்தாண்டின் அறுவடை நாளான பொங்கல் திருநாளை, மிகுந்த மன வேதனையுடன், 'கறுப்பு பொங்கலாக' அனுசரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.