/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்புராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு
ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு
ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு
ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:15 AM
ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கருப்பண்ண கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர். இவரது நிலம், 2.20 ஏக்கரை, கடந்த, 2008ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறைக்காக அரசு கையகப்படுத்தியது. அதற்கு உரிய இழப்பீடு வழங்காத காரணத்தால், காளியப்ப கவுண்டர் ராசிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு முடிவில் காளியப்ப கவுண்டருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நிறைவேற்று மனு அளித்ததில் காளியப்ப கவுண்டருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வருவாய்த்துறை மூலம், 2.70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள இழப்பீட்டை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து உரிய இழப்பீட்டை வழங்கும்படி ராசிபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி, நேற்று வக்கீல் குமார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், 2 பேர் கொண்ட குழுவினர், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து ஜப்திக்கான உத்தரவை வழங்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தாசில்தார் தரப்பில் கேட்டுக்கொண்டனர்.இதுகுறித்து, நீதிமன்ற ஊழியர்கள், விவசாயிகள், 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிப்பதாக தாசில்தார் தரப்பில் தெரிவித்தனர். எனவே, தாசில்தாருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. நீதிமன்ற ஊழியர்கள், திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் தாசில்தார் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.