/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குண்டும், குழியுமாக மாறிய வேட்டாம்பாடி தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறிய வேட்டாம்பாடி தார்ச்சாலை
குண்டும், குழியுமாக மாறிய வேட்டாம்பாடி தார்ச்சாலை
குண்டும், குழியுமாக மாறிய வேட்டாம்பாடி தார்ச்சாலை
குண்டும், குழியுமாக மாறிய வேட்டாம்பாடி தார்ச்சாலை
ADDED : ஜூன் 18, 2025 01:22 AM
நாமக்கல், நாமக்கல் அருகே, அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறியதால், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த அரசு உயர்நிலைப்பள்ளி, வீசாணம் செல்லும் சாலையில் புதிய கட்டடம் கட்டி அங்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்த உயர்நிலைப்பள்ளி புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் நடந்தும், சைக்கிளிலும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த தார்ச்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும், மாணவ, மாணவியர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, புதிதாக அமைக்கப்பட்டுவரும் ரிங் சாலையில் இருந்து பள்ளி வளாகம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.