Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ களம் பற்றாக்குறையால் நெடுஞ்சாலையில் மக்காச்சோளத்தை காய வைக்கும் அவலம்

களம் பற்றாக்குறையால் நெடுஞ்சாலையில் மக்காச்சோளத்தை காய வைக்கும் அவலம்

களம் பற்றாக்குறையால் நெடுஞ்சாலையில் மக்காச்சோளத்தை காய வைக்கும் அவலம்

களம் பற்றாக்குறையால் நெடுஞ்சாலையில் மக்காச்சோளத்தை காய வைக்கும் அவலம்

ADDED : ஜூன் 02, 2025 06:49 AM


Google News
நாமகிரிப்பேட்டை: சிறு, குறு விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த தானியங்களை, சொந்த இடத்தில் காய வைக்க வசதி இருக்காது. இதனால், கோவில், பஞ்சாயத்து இடங்களில் இதுபோன்ற தானியங்கைளை காய வைப்பது வழக்கம். இதை தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் காய வைக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளது.

உயரமாக, தண்ணீர் தேங்காதவாறு, வாகனங்கள் வந்து செல்ல வசதியாக இந்த களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு ஊராட்சிக்கு ஒரு களம் மட்டுமே இருப்பதால் அப்பகுதி விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. களத்திற்கு அருகே வசிப்பவர்கள் மட்டும்தான் அதை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மற்ற விவசாயிகள் வழக்கம்போல் பொது இடங்களில், நெடுஞ்சாலைகளில் தானியங்களை காய வைத்து வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஈஸ்வரமூர்த்தி பாளையம் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் அருகிலேயே களம்

உள்ளது. ஆனால், அதில் ஒருவர் மட்டுமே காய வைக்கும் அளவிற்கு இட வசதி குறைவாக உள்ளது. இதனால், மாநில நெடுஞ்சாலையில் மக்காச்சோளம், சோளம், நெல் உள்ளிட்டவைகளை காய வைக்கின்றனர். சாலையில் காய வைப்பதால் சேதாரம் அதிகம் ஆவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே ஊராட்சிகளில் பல்வேறு இடங்களில் களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us