/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மா சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி மா சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி
மா சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி
மா சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி
மா சாகுபடி குறித்து தொழில் நுட்ப பயிற்சி
ADDED : செப் 18, 2025 01:46 AM
நாமக்கல் :எருமப்பட்டி வட்டாரத்தில், போடிநாயக்கன்பட்டி, கெஜகோம்பை, புதுக்கோம்பை போன்ற வருவாய் கிராமங்களில், 322.40 ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவில் சாகுபடியை மேம்படுத்த, சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் நோய் பூச்சி, ஊட்டச்சத்து மேலாண் குறித்த அறிவியல் தகவல்கள் மற்றும் மா பயிரில் கவாத்து முறைகள் மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி முகாம், புதுக்கோம்பை கிராமத்தில் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பால் ஜாஸ்மின் தலைமை வகித்தார். பூச்சி மற்றும் நோய்கள் துறை உதவி பேராசிரியர் தாரணி பிரியா பங்கேற்று, தொழில் நுட்ப பயிற்சியளித்தார். தொடர்ந்து, களப்பயிற்சி அளித்து, தொழில்நுட்ப தகவல்களையும் வழங்கினார். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.