Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குமாரபாளையம் எக்ஸல் கல்லுாரியில் ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

குமாரபாளையம் எக்ஸல் கல்லுாரியில் ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

குமாரபாளையம் எக்ஸல் கல்லுாரியில் ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

குமாரபாளையம் எக்ஸல் கல்லுாரியில் ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

ADDED : செப் 11, 2025 01:40 AM


Google News
குமாரபாளையம் :குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியின், தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில், 'மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கு - கண்டிப்புடன் கூடிய வழிகாட்டியா? தோழமையுடன் கூடிய வழிகாட்டியா?' என்ற தலைப்பில், ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந், உள்தர மதிப்பீட்டு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் சுப்பிரமணியம், அறிவியல் துறை தலைவர் மஞ்சுளா, தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எக்ஸல் பாலிடெக்னிக் கல்லுாரி மானுடவியல் மற்றும் அறிவியல் துறை தலைவர் முருகன் நடுவராக பங்கேற்றார்.

'கண்டிப்புடன் கூடிய வழிகாட்டி' என்ற தலைப்பில், மாணவியர் கிருஷ்ணவேணி, வைதேகி, வைஷ்ணவி, மாணவன் தீபக்குமார் கலந்து கொண்டனர். 'தோழமையுடன் கூடிய வழிகாட்டி' என்ற தலைப்பில், மாணவர்கள் வர்ஷினி, சஞ்சய், பிரியங்கா காந்தி, பூர்ணிமா கலந்துகொண்டனர். பல்வேறு சிந்தனையூட்டும் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், 'ஆசிரியர் என்பது தோழமையும் கண்டிப்பும் இணைந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்; தற்போதைய சூழலில் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டி சிறந்தவர்' என, நடுவர் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us