/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு ரூ.6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு
ரூ.6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு
ரூ.6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு
ரூ.6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு
ADDED : செப் 12, 2025 01:36 AM
நாமக்கல், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பயன் பெறும், கரூர் வைஸ்யா வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஸ்டெம் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். வங்கியின் சி.எஸ்.ஆர்., புராஜக்ட் மேனேஜர்கள் வெங்க டேஷ், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஸ்டெம் ஆய்வகத்தை திறந்து வைத்தார். உதவித் திட்ட அலுவலர் அருள்தாஸ், பள்ளி துணை ஆய்வாளர்
கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.