/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பொம்மசமுத்திரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பொம்மசமுத்திரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
பொம்மசமுத்திரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
பொம்மசமுத்திரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
பொம்மசமுத்திரம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : செப் 19, 2025 01:20 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் பகுதிக்கு உட்பட்ட பொம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, மாலை, 4:00 மணி வரை நடந்தது. முகாமில், 13 அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
அதில், மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், கடை மாற்றம் ஆகிய பணிகள் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டன. மொத்தம், 441 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 234 பெண்கள் மனு அளித்துள்ளனர். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபாலன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.