/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 21, 2025 12:58 AM
வெண்ணந்துார் :வெண்ணந்துார் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி, நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ் குமார் எம்.பி., ஆகியோர் முகாமை ஆய்வு செய்தனர்.
பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்னை, மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, பல், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை, கதிர் இயக்க சிகிச்சை மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் உட்பட 17 வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., இலவசமாக பார்க்கப்பட்டது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட சுகாதார அலுவலர் பூங்கொடி, ஆத்ம குழு தலைவர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள்., வனிதா, கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். முகாமில் 1,361 பேர் பங்கேற்றனர். 807 பேருக்கு இ.சி.ஜி., 154 பேருக்கு எக்கோ, 96 பேருக்கு நரம்பு சம்பந்தமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது