/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பேச்சு, கட்டுரை போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்பேச்சு, கட்டுரை போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
பேச்சு, கட்டுரை போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
பேச்சு, கட்டுரை போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
பேச்சு, கட்டுரை போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : செப் 03, 2025 12:49 AM
நாமக்கல் :தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், இலக்கிய மன்ற வட்டார அளவிலான போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராமு, நாமக்கல் மகளிர் பள்ளி ஆங்கில முதுகலை ஆசிரியர் மனோன்மணி, பட்டதாரி ஆசிரியர்கள் சித்ரா, பானுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்து, பேச்சு, கட்டுரை, கதை சொல்லுதல் மற்றும் கவிதை எழுதும் போட்டிகளை நடத்தினர்.
இதில், தமிழ் மொழியில் நடத்தப்பட்ட போட்டிகளில், 62 பேர், ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போட்டிகளில், 58 பேர் என, மொத்தம், 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை, வட்டார வள மைய பயிற்றுனர்கள் சசிராணி, கோமதி, பிரியதர்ஷினி, கோகிலா ஆகியோர் செய்து இருந்தனர். 'இன்றும் போட்டிகள் நடக்கிறது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.