/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கத்தி, வேல், அரிவாளுக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை கத்தி, வேல், அரிவாளுக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை
கத்தி, வேல், அரிவாளுக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை
கத்தி, வேல், அரிவாளுக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை
கத்தி, வேல், அரிவாளுக்கு காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை
ADDED : செப் 20, 2025 01:58 AM
ப.வேலுார், புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று, ப.வேலுார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி, பரமத்தி அருகே உள்ள ஒத்தக்கடை, ஆவாரம்காட்டு புதுாரில், நல்லேந்திர பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி, தை மாதத்தில் சிறப்பு பூஜை நடப்பது
வழக்கம். அதன்படி, நேற்று இக்கோவிலில் உள்ள நல்லேந்திர பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள பெரியசாமி, வீரம்மாள் சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஒத்தக்கடை, ஆவாரங்காட்டு புதுாரை சேர்ந்த பக்தர்கள் கத்தி, வேல், அரிவாள் போன்ற ஆயுதங்களை ப.வேலுார் காவிரி ஆற்றில் சுத்தம் செய்து மாலை இட்டு பூஜை செய்தனர்.