Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சாலையில் கொட்டிய சுத்திகரிக்காத சோயா ஆயிலை குடத்தில் பிடித்து சென்ற மக்கள்: எஸ்.பி., எச்சரிக்கை

சாலையில் கொட்டிய சுத்திகரிக்காத சோயா ஆயிலை குடத்தில் பிடித்து சென்ற மக்கள்: எஸ்.பி., எச்சரிக்கை

சாலையில் கொட்டிய சுத்திகரிக்காத சோயா ஆயிலை குடத்தில் பிடித்து சென்ற மக்கள்: எஸ்.பி., எச்சரிக்கை

சாலையில் கொட்டிய சுத்திகரிக்காத சோயா ஆயிலை குடத்தில் பிடித்து சென்ற மக்கள்: எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : ஜூன் 09, 2025 04:45 AM


Google News
நாமக்கல்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஆயில் ஏற்றி சென்ற லாரியில் இருந்து சாலையில் கொட்டிய சோயா ஆயிலை பொதுமக்கள் குடம் குடமாக பிடித்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய, 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 'எடிபிள்' ஆயிலை டேங்கர் லாரி ஒன்று, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் புறவழிச்சாலை வழியாக சேலம் நோக்கி ஏற்றி சென்றுகொண்டிருந்தது. நாமக்கல் அடுத்த புதன்சந்தை அருகே சென்றபோது, லாரியின் பின்புறம் அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

இதையடுத்து, ஆயில் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். இதையறிந்த அப்பகுதி மக்கள், குடம், பக்கெட்களை எடுத்து வந்து ஆயிலை பிடித்து சென்றனர். நல்லிபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, 'சுத்திகரிக்கப்படாத சோயா ஆயிலை பயன்படுத்த வேண்டாம்' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு, நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி, நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட புதன்சந்தை மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்தபோது, வாகனம் பழுது ஏற்பட்டு மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதியதில் ஆயில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சோயா ஆயில் சாலையில் ஊற்றியது. பொதுமக்கள் சிலர் இந்த ஆயிலை பிடித்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய். எனவே சோயா ஆயிலை மக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us