/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேர்வில் மகன்கள் தோல்வி தந்தை விபரீத முடிவு தேர்வில் மகன்கள் தோல்வி தந்தை விபரீத முடிவு
தேர்வில் மகன்கள் தோல்வி தந்தை விபரீத முடிவு
தேர்வில் மகன்கள் தோல்வி தந்தை விபரீத முடிவு
தேர்வில் மகன்கள் தோல்வி தந்தை விபரீத முடிவு
ADDED : மே 23, 2025 01:20 AM
திருச்செங்கோடு, தனது இரண்டு மகன்களும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தி
யில், தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள குப்பாண்டாம்பாளையம், வன்னியர் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் கபில்ஆனந்த், 41. இவரது ஒரு மகன் திருச்செங்கோடு அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதினார்.
மற்றொரு மகன், 10ம் வகுப்பு தேர்வெழுதினார். இருவரும் அரசு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன அழுத்தத்தில் கபில் ஆனந்த் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் வீட்டில் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த கபில் ஆனந்த், திடீரென அங்குள்ள அறையில் புகுந்து கதவை சாத்தி விட்டு, மனைவியின் சேலையில், பேன் கொக்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் திடீரென ஓடுவதை கண்ட மனைவி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.