/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.2 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது ரூ.2 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
ரூ.2 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
ரூ.2 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
ரூ.2 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
ADDED : மார் 17, 2025 04:10 AM
நாமக்கல்: நாமக்கல் - துறையூர் சாலையில் இருந்து ரயில் நிலையம் பிரிந்து செல்லும் சாலையில், எஸ்.ஐ., சாந்த-குமார் தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 5:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்ற காரை நிறுத்தும்படி சைகை காண்பித்-தனர். ஆனால், காரில் வந்த நபர்கள் நிறுத்தாமல் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் காரை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, 186 கிலோ ஹான்ஸ், கூல் லிப், பாசன் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், நல்லிபாளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கார்த்திக், 27, காரை ஓட்டி வந்த டிரைவர் கணேசபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், 29, என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்-தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.