/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தேர்வுஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தேர்வு
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தேர்வு
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தேர்வு
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 02, 2024 07:57 AM
நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள முல்லை மஹாலில், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின், மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு நடந்தது.
மாநில செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆலோசனை குழு தலைவர் தயாளன், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். இதில், மாவட்ட தலைவராக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் வெங்கடேசன் பட்டாச்சாரியார், பொதுச்செயலாளராக புவனேஸ்வர், பொருளாளராக மகேஷ் உள்பட பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உழவாரப்பணி, திருவிளக்கு பூஜை, சத்சங்கம் சமய வகுப்பு நடத்துவது உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.