/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேன் மீது டூவீலர் மோதி விபத்து சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் பலி வேன் மீது டூவீலர் மோதி விபத்து சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் பலி
வேன் மீது டூவீலர் மோதி விபத்து சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் பலி
வேன் மீது டூவீலர் மோதி விபத்து சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் பலி
வேன் மீது டூவீலர் மோதி விபத்து சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் பலி
ADDED : மே 21, 2025 02:20 AM
ராசிபுரம் ;ராசிபுரம் அருகே, மிட்டாய் கம்பெனி வேன் மீது டூவீலர் மோதிய விபத்தில், சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் பலியானார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் தங்கமணி, 52; இவர், சேலம் மாநகராட்சியில், பில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, தங்கமணி வழக்கம் போல், தன்னுடைய, 'சூப்பர் ஸ்பிளண்டர்' டூவீலரில் வேலைக்கு
புறப்பட்டார். ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில், அப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மிட்டாய் கம்பெனி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, மிட்டாய் கம்பெனிக்கு சொந்தமான வேன், வேலையாட்களை அழைத்துக்கொண்டு கம்பெனிக்குள் செல்ல திரும்பியது.
இதை எதிர்பார்க்காத தங்கமணி, சுதாரிப்பதற்கு
ள் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 'ஹெல்மெட்' அணியாத தங்கமணி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கமணி உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.