/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் மீட்பு அரசு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் மீட்பு
அரசு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் மீட்பு
அரசு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் மீட்பு
அரசு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய் துறையினர் மீட்பு
ADDED : ஜூன் 17, 2025 02:29 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பஞ்.,க்குட்பட்ட ஆவத்திபாளையம் பகுதியில் ஓடை புறம்போக்கு நிலம், 50 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை, நேற்று சமன்படுத்தம் பணியில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, களியனுார் வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, சமன்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
அப்போது, 'அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆத்துமீறி பயன்படுத்தக்கூடாது; மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மீட்கப்பட்ட இடத்தில் வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்தனர்.