/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கார் மோதி ஓய்வு பி.டி.ஓ., உயிரிழப்பு கார் மோதி ஓய்வு பி.டி.ஓ., உயிரிழப்பு
கார் மோதி ஓய்வு பி.டி.ஓ., உயிரிழப்பு
கார் மோதி ஓய்வு பி.டி.ஓ., உயிரிழப்பு
கார் மோதி ஓய்வு பி.டி.ஓ., உயிரிழப்பு
ADDED : செப் 21, 2025 12:55 AM
குமாரபாளையம் :குமாரபாளையம் அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., பலியானார். குமாரபாளையம் அருகே சக்தி நகரில் வசிப்பவர் ஜெயராமன், 71. ஓய்வு பெற்ற பி.டி.ஓ., இவர் நேற்று காலை, 11:00 மணியளவில் சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே, டி.மார்ட் வணிக வளாகம் பகுதியில் டி.வி.எஸ். எக்ஸல் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த சுசுகி எஸ்கார்ட் கார் ஓட்டுனர், இவரது டூவீலர் மீது மோதியதில், ஜெயராமன் படுகாயமடைந்தார்.இவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், இவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் பிரகாஷ், 39, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.