/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயியின் வீட்டை இடித்தவருக்கு 'காப்பு' விவசாயியின் வீட்டை இடித்தவருக்கு 'காப்பு'
விவசாயியின் வீட்டை இடித்தவருக்கு 'காப்பு'
விவசாயியின் வீட்டை இடித்தவருக்கு 'காப்பு'
விவசாயியின் வீட்டை இடித்தவருக்கு 'காப்பு'
ADDED : செப் 23, 2025 01:41 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி மாவாறு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சுப்ரமணி, 55; இவர், அவருடைய அக்காவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் அந்த நிலத்தை தம்மம்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் ரவி, 60, என்பவருக்கு கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன்பு விற்றுவிட்டார். ஆனால், சுப்ரமணி வீட்டை காலி செய்யவில்லை. பலமுறை கேட்டும் காலி செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சுப்பரமணி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு ரவி அங்கிருந்த வீட்டை இடித்துவிட்டார். இதுகுறித்து சுப்ரமணி கொடுத்த புகார்படி, வன்கொடுமை சட்டத்தின் கீழ் ரவியை ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர்.