/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மொபட்டில் புகையிலை கடத்தியவருக்கு 'காப்பு' மொபட்டில் புகையிலை கடத்தியவருக்கு 'காப்பு'
மொபட்டில் புகையிலை கடத்தியவருக்கு 'காப்பு'
மொபட்டில் புகையிலை கடத்தியவருக்கு 'காப்பு'
மொபட்டில் புகையிலை கடத்தியவருக்கு 'காப்பு'
ADDED : மே 19, 2025 02:40 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார், நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மன் நகர் கிழக்கு வீதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, 'டி.வி.எஸ் எக்ஸல்' மொபட்டில் மூட்டைகளுடன் சென்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 20.250 கிலோ எடையுள்ள புகையிலை மதிப்பு, 33,360 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து புகையிலை கடத்திய பிரபு, 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.