/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வெண்ணந்துாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கைவெண்ணந்துாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
வெண்ணந்துாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
வெண்ணந்துாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
வெண்ணந்துாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெண்ணந்துாரை சுற்றி, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கல் குவாரிகள், குடிசை வீடுகள், தனியார் நுால் மில்கள் உள்ளன. மேலும், வயல்வெளிகளில் திறந்தவெளி கிணறுகள் அதிகளவில் உள்ளன. அவ்வப்போது மின் கசிவு, தீவிபத்து மற்றும் பிற அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன.சமீபத்தில், நடுப்பட்டியில் வைக்கோல் போரில் தீ, தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் தனியார் பட்டு வளர்ப்பு குடோனில் தீ, கரடியானுாரில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ உள்ளிட்ட விபத்துகள் ஏற்பட்டன.இதுபோன்ற சமயங்களில், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ வேகமாக பரவி முழுவதும் எரிந்து நாசமாகிறது. ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்துாருக்கு செல்ல, 15 கிலோ மீட்டர் துாரம் இருப்பதாலும், ராசிபுரம் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தீயணைப்பு வீரர்களால் வர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வெண்ணந்துார் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.