/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாநில தொழிற்தட சாலையோர பள்ளத்தை சீரமைக்க கோரிக்கைமாநில தொழிற்தட சாலையோர பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
மாநில தொழிற்தட சாலையோர பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
மாநில தொழிற்தட சாலையோர பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
மாநில தொழிற்தட சாலையோர பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2025 02:29 AM
ராசிபுரம், ராசிபுரத்தில் இருந்து பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் வழியாக மோகனுார் செல்ல, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொழிற்தடச்சாலை அமைக்கப்பட்டது. ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலையில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வரை சாலையோரம் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் கல் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க சாலையோரம் பள்ளம் தோண்டினர். இதற்காக பேவர் பிளாக் கற்களையும் அகற்றிவிட்டனர். ஆனால், பைப் பதித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளத்தையும் மூடவில்லை, பேவர் பிளாக் கற்களையும் பதிக்கவில்லை. இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சாலையை ஒட்டி பள்ளம் இருப்பதால் இரவு நேரத்தில் சாலையை ஒட்டி வரும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. வாரத்திற்கு இரண்டு வாகனங்களாவது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.
எனவே, சாலையை ஒட்டியுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.