Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோனேரிப்பட்டி ஏரியில் நடைபாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கோனேரிப்பட்டி ஏரியில் நடைபாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கோனேரிப்பட்டி ஏரியில் நடைபாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கோனேரிப்பட்டி ஏரியில் நடைபாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ADDED : மே 21, 2025 01:48 AM


Google News
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சியில், 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகர் பகுதிக்குள் பூங்காக்கள்

அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வயதானவர்கள் நடைபயிற்சி செல்ல போதுமான இடமில்லை.

இதானல், ஆத்துார் பிரதான சாலையில் உள்ள அரசுப்பள்ளி விளையாட்டு மைதானத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம் நகராட்சி எல்லையில் உள்ள கோனேரிப்பட்டி ஏரிக்கரையில், 2.76 கோடி ரூபாய் மதிப்பில் நடைபயிற்சிக்கான பாதை

அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த, எட்டு மாதங்களுக்கு முன் நடந்தது. பேவர் பிளாக் நடைபாதை, வேலி, நடைபாதையை சுற்றி மின் விளக்குகள் அமைப்பதற்கான பணி தொடங்கியது. ஆனால், எட்டு மாதங்களாகியும், 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.

நடைபாதை சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டியுள்ளதால், நடக்கவும் பயன்படுத்த

முடியவில்லை. கோடை விடுமுறையில் உள்ள மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் நடைபாதை திறப்புக்காக காத்திருக்கின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் விரைவாக நடைபாதை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 21

மத்திய அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாமக்கல்-மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான, நான்கு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்கக்கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கான்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம், 26,000 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச பென்சன், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், மத்திய, மாநில தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us