/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை
ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை
ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை
ஊராட்சி அலுவலக கட்டடம் விரைவில் கட்ட கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2025 04:33 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் ஊராட்சியில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கான அலுவலக கட்டடம் ஊனாந்தாங்கல் கிரா-மத்தில் கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.
கட்-டடம் சேதமடைந்ததாலும், இடம் வசதி இல்லாததாலும் அருகில் உள்ள மகளிர் குழு கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றி, ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் கட்டடப்பணியை தொடங்கினர். ஆனால், பணி இன்னும் முழுவதும் முடிய-வில்லை. மகளிர் குழுவுக்கான கட்டடத்தில் ஊராட்சி அலுவ-லகம் இயங்குவதால், மகளிர் குழுவினர் மிகவும் சிரமப்படுகின்-றனர். அவர்களுடைய பொருட்களை அறைக்கு வெளியே வைத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஊனாந்தாங்கல் ஊராட்சி அலு-வலகம் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.