/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1.33 கோடியில் புதுப்பிக்கும் பணி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1.33 கோடியில் புதுப்பிக்கும் பணி
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1.33 கோடியில் புதுப்பிக்கும் பணி
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1.33 கோடியில் புதுப்பிக்கும் பணி
விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1.33 கோடியில் புதுப்பிக்கும் பணி
ADDED : செப் 15, 2025 02:06 AM
நாமக்கல்:நாமக்கல் நகரின் மைய பகுதியில், கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரையில், பழமை வாய்ந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சமயத்தில், நரசிம்மர், நாமகிரி தாயார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவில் மண்ணில் புதைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு முன், இங்கு விழா நடத்துவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2022ல் கோவிலில் இருந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் பாலாலயம் செய்து அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே இடிந்து விழும் நிலையில் இருந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதன்பலனாக, கோவிலை புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியளித்தது. அதற்காக, 1.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவில் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, உறுப்பினர்கள் செல்வசீராளன், ராம ஸ்ரீனிவாசன், மல்லிகா, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் ஆகியோர் பங்கேற்று கோவில் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.