/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
ADDED : ஜூன் 30, 2025 04:39 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கிளை நுாலகத்தில், வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. கிளை நுாலகர் மாரியாயி, வாசகர் வட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஆயிஷா நடராசன், கந்தர்வன் போன்றவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி, 'பள்ளியில் ஒரு வைரம்' என்ற சிறுகதை கூறினார்.
சரஸ்வதி என்ன ஆச்சு? என்ற கதையை, மாணவி கலைமகள் கூறினார். மேலும், பல்வேறு மாணவர்கள் சிறுகதை கூறினர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாற்றுத்திறனாளி சங்க தலைவர் பழனிவேல் கதைகள் சொல்லி அசத்தினார். இதில், வாசகர் வட்ட உறுப்பினர்கள் முகமது, சம்பத், சவுந்தர், முனிராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.