/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சேந்தமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல் சேந்தமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
சேந்தமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
சேந்தமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
சேந்தமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூன் 05, 2025 01:23 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, புதன்சந்தையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் எஸ்.ஐ., தமிழ்குமரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதன்சந்தை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, சேந்தமங்கலத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த, 'ஆம்னி' வேனை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில், மூட்டைகளில் கட்டியபடி, ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வேனை பறிமுதல் செய்த போலீசார், முத்துக்காப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், 25, பெருமாப்பளையத்தை சேர்ந்த ராஜேஷ், 26, ஆகியேரை உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.