/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வடிகால் அடைப்பால் வீட்டில் புகுந்த மழைநீர்வடிகால் அடைப்பால் வீட்டில் புகுந்த மழைநீர்
வடிகால் அடைப்பால் வீட்டில் புகுந்த மழைநீர்
வடிகால் அடைப்பால் வீட்டில் புகுந்த மழைநீர்
வடிகால் அடைப்பால் வீட்டில் புகுந்த மழைநீர்
ADDED : மே 21, 2025 02:17 AM
ப.பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் வடிகால் நிரம்பி, சாலையில் சென்றது.
அக்ரஹாரம் பகுதியில், 5க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, நகராட்சி கவுன்சிலர் சுசீலா கூறுகையில், ''இப்பகுதியில் உள்ள வடிகால், 40 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் மழை பெய்தால் இந்த வடிகாலில் தான் மழைநீர் செல்லும். வடிகாலில் அடைப்பு, குறுகிய வடிகால் ஆகியவற்றால் மழைநீர் இப்பகுதியில் உள்ள, 5 வீடுகளில் புகுந்து விட்டது.
வடிகாலை விரிவு
படுத்த வேண்டும் என, நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை தெரிவித்துள்ளேன். இப்பகுதியில் குடியிருப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரியளவில் பாதிப்பு ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.