Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சேந்தமங்கலத்தில் மழை

சேந்தமங்கலத்தில் மழை

சேந்தமங்கலத்தில் மழை

சேந்தமங்கலத்தில் மழை

ADDED : செப் 25, 2025 02:21 AM


Google News
சேந்தமங்கலம், :சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று பரவலாக கனமழை பெய்தது.சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில், நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த காற்றுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us