/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/செல்வ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாசெல்வ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
செல்வ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
செல்வ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
செல்வ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துார், தங்க சாலை வீதியில் செல்வ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு பூச்சாட்டு விழா நடைபெறும். அதன்படி, நேற்று அம்மனுக்கு பூச்சாட்டு விழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக, கோவில் முன் கொடியேற்று விழா நடந்தது. இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடும் விழா நடந்தது. இதில், பெண்கள் மாவிளக்கு எடுத்துவர, ஆண்கள் கம்பம் எடுத்து ஆடி வந்தனர். பின், ஊர் கிணற்றின் அருகே கம்பத்துக்கு பூஜை செய்து ஊரைச் சுற்றி ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, கோவில் முன் கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


