Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/எடையாளர் ஒருவரை பணியமர்த்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எடையாளர் ஒருவரை பணியமர்த்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எடையாளர் ஒருவரை பணியமர்த்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எடையாளர் ஒருவரை பணியமர்த்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 28, 2025 04:23 AM


Google News
நாமக்கல்: எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்-திற்கு, சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடைகளில், தற்போது, 'புளூடூத்' மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை செய்-யும்போது, ஒரு ரேஷன் கார்டுக்கு பொருள் வினியோகம் செய்ய குறைந்தபட்சம், பத்து நிமிடமாகிறது. அதனால், நாளொன்றுக்கு, 50 கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருள் வினியோகம் செய்ய முடிகிறது. அவற்றை முற்றிலும் நீக்குவதுடன், காலதாமதம் ஏற்ப-டாத வகையில் எளிமைப்படுத்த வேண்டும்.நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து முதன்மை சங்-கங்களுக்கு நுகர்வு செய்யப்படும் பொருட்களில், அரிசி, 2 முதல், 5 கிலோ வரையும், சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள், ஒன்று முதல், இரண்டு கிலோ வரையும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களில், 40 சதவீதம் மகளிர், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். பணிச்சு-மையை கருத்தில்கொண்டு, எடையாளர் ஒருவர் அனுமதிக்க வேண்டும். அதுவரை, வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனு-மதிக்க வேண்டும். விற்பனையாளர்கள், மாவட்ட தேர்வாணையக்-குழு மூலம் நியமனம் செய்யப்படும்போது, பணி மூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயர்வுக்கு, இதே பணி மூப்பை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் பதவி உயர்வில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட, எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us