/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பஞ்., செயலரை கண்டித்து தர்ணா போராட்டம் பஞ்., செயலரை கண்டித்து தர்ணா போராட்டம்
பஞ்., செயலரை கண்டித்து தர்ணா போராட்டம்
பஞ்., செயலரை கண்டித்து தர்ணா போராட்டம்
பஞ்., செயலரை கண்டித்து தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:36 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், 85.கவுண்டம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மோகன் என்பவர், வீட்டுவரி ரசீது வழங்கக்கோரி பஞ்., அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை.
ரசீது வழங்க கால தாமதம் செய்த பஞ்., செயலாளர் வெங்கடாசலத்தை கண்டித்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் பஞ்., அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 'நாளை மோகன் பெயரில் ரசீது வழங்கப்படும்' என, பஞ்., செயலாளர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.