/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 14, 2025 07:49 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 20 காலை, 10:30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாதவர்கள், பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும், முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். விபரங்களுக்கு, 04286--222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.