/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
ADDED : செப் 14, 2025 04:49 AM
காம்சாட்கா: ரஷ்யாவின் காம்சாட்கா கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று பதிவான நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷ்யாவின் கிழக்கே காம்சாட்கா கடற்கரை பகுதி அருகே, இந்-திய நேரப்படி நேற்று காலை 9:37 மணிக்கு 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில
நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரி-வித்தது.
இது, பெட்ரோபாவ்லாவ்ஸ்க் காம்ச்சாட்கா என்ற இடத்தில் இருந்து 112 கி.மீ., தொலைவில், 39.5 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.பயங்கர நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யாவின் காம்சாட்கா
பகுதியில் கட்டடங்கள் குலுங்கின; கடற்பரப்பில் ராட்சத அலைகள் எழும்பின. இதை தொடர்ந்து, ரஷ்ய கடலோரப் பகுதி-களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்க-ளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த ஜூலையில் இதே பகுதியில் 8.8 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளிலும் எதிரொலித்தன. இது, சக்தி வாய்ந்த நிலநடுக்கங்-களில் ஆறாவது இடத்தில் இருப்பதாக
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.