/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விசைத்தறி தொழிலாளர் சங்கம் போனஸ் கேட்டு போராட்டம் விசைத்தறி தொழிலாளர் சங்கம் போனஸ் கேட்டு போராட்டம்
விசைத்தறி தொழிலாளர் சங்கம் போனஸ் கேட்டு போராட்டம்
விசைத்தறி தொழிலாளர் சங்கம் போனஸ் கேட்டு போராட்டம்
விசைத்தறி தொழிலாளர் சங்கம் போனஸ் கேட்டு போராட்டம்
ADDED : ஜன 08, 2025 06:49 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தை மாதம், பொங்கல் திருநாளையொட்டி போனஸ் வழங்குவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு பொங்கல் விழா நெருங்கி வரும் சூழ்நிலையில், விசைத்தறி தொழிலாளர்கள், 'தங்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்' என, விசைத்தறி உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இது சம்பந்தமாக, கடந்த, 4ல் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் செம்பகராமன் முன்னிலையில், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை கண்டித்து, நேற்று ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பெருமளவில் பங்கேற்று, 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி, தாசில்தார் அலுவலகம் முன் கண்டன கோஷம் எழுப்பினர்.