/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாட்டுக்கோழி பராமரிப்பு; ஒரு நாள் பயிற்சி வகுப்புநாட்டுக்கோழி பராமரிப்பு; ஒரு நாள் பயிற்சி வகுப்பு
நாட்டுக்கோழி பராமரிப்பு; ஒரு நாள் பயிற்சி வகுப்பு
நாட்டுக்கோழி பராமரிப்பு; ஒரு நாள் பயிற்சி வகுப்பு
நாட்டுக்கோழி பராமரிப்பு; ஒரு நாள் பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 20, 2024 06:43 AM
நாமக்கல் : 'நாட்டுக்கோழி பராமரிப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடக்கிறது' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய பேராசிரியர், தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கோழியின நோய் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மையத்தில், வரும், 26 காலை, 11:00 மணிக்கு, பண்ணையாளர்களுக்கான, 'மழைக்காலங்களில் நாட்டுக்கோழி பராமரிப்பில் மூலிகை மருத்துவத்தின் பங்கு' குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
விபரங்களுக்கு, 04286-233230 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.