/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குரு அரிச்சந்திரா போஸ்டரை கிழித்து அகற்றிய போலீசார் குரு அரிச்சந்திரா போஸ்டரை கிழித்து அகற்றிய போலீசார்
குரு அரிச்சந்திரா போஸ்டரை கிழித்து அகற்றிய போலீசார்
குரு அரிச்சந்திரா போஸ்டரை கிழித்து அகற்றிய போலீசார்
குரு அரிச்சந்திரா போஸ்டரை கிழித்து அகற்றிய போலீசார்
ADDED : ஜூன் 26, 2025 01:39 AM
குமாரபாளையம், குமாரபாளையம், தட்டாங்குட்டை பஞ்.,க்குட்பட்ட ஹிந்து சமத்துவ மயானத்தில், சில நாட்களாக, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு சடலம் அடக்கம் செய்யவும், மத சின்னங்கள் பதிக்கவும் அனுமதி வழங்க வேண்டும் எனக்கேட்டு வந்தனர்.
அதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு
தெரிவித்து வரும் நிலையில், கடந்த வாரம் கலெக்டர் உமா, மயானத்தை ஆய்வு செய்து மயானத்தில் அனைவருக்கும் நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள், நேற்று அமாவாசை தினத்தையொட்டி குரு அரிச்சந்திரா படங்களை மயான சுவற்றில் ஒட்டி பரிகார பூஜை செய்தனர். இந்த மயானம் இந்துக்கள் சமத்துவ மயானமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டனர். இந்த படத்தை, நேற்று திருச்செங்கோடு டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் வந்த போலீசார் மற்றும் தட்டான்குட்டை ஊராட்சி பணியாளர்கள் கிழித் அகற்றினர்.